நடுவில் பூஜ்ஜியத்தை கொண்டுள்ள எந்த ஓரு மூன்றிலக்க எண்ணுக்கான வர்க்கத்தை காணுதல்

504, 102, 903, 701 போன்ற நடுவில் பூஜ்ஜியத்தை கொண்டுள்ள மூன்றிலக்க எண்ணுக்கான வர்க்கத்தை கீழ்காணும் எளிய வழிமுறைமூலமாக மனதாலேயே சொல்லிவிட முடியும்.

வழிமுறை :

படி 1:   முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும்.
படி 2:   பின்னர் முதல் மற்றும் கடைசி இலக்கத்தின் பெருக்கல் பலனை இருமடங்காக்க வேண்டும்.
படி 3:   வர்க்கம் காண வேண்டிய எண்ணின் முதல் இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். பின்னர் படி1, படி2 மற்றும் படி3 விடைகளை ஒன்று சேர்க்க வேண்டும்.

குறிப்பு :

எந்த ஒரு ஸ்டெப்பிலும் வரும் விடையானது 3 இலக்கமாக இருந்தால், விடையின் முதல் இலக்கத்தை அடுத்த ஸ்டெப்பிர்க்கு Carry Forward செய்யவேண்டும். மாறாக ஓரிலக்கமாக இருந்தால் அதற்கு முன்பாகா பூஜ்ஜியத்தைச் சேர்க்க வேண்டும்.

உதாரணம் 1 : (504)2 = ?

(504)2 = (5)2 | (5x4)x2 | (4)2
= 25 | 40 | 16
= 254016

வழிமுறை :

படி 1:   முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (4)2=16.
படி 2:   பின்னர் எண்ணின் முதல் மற்றும் கடைசி இலக்கத்தின் பெருக்கல் பலனை இருமடங்காக்க வேண்டும்.(5x4)x2 = 40.
படி 3:   வர்க்கம் காண வேண்டிய எண்ணின் முதல் இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (5)2=25. பின்னர் படி1, படி2 மற்றும் படி3 விடைகளை ஒன்று சேர்க்க வேண்டும்.


உதாரணம் 2 : (909)2= ?

(909)2 = (9)2 | (9x9)x2 | (9)2
= 81 | 162 | 81
= 826281

வழிமுறை :

படி 1:   முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (9)2=81.
படி 2:   பின்னர் எண்ணின் முதல் மற்றும் கடைசி இலக்கத்தின் பெருக்கல் பலனை இருமடங்காக்க வேண்டும்.(9x9)x2 = 162. ( 162 ஆனது 3 இலக்கமாக இருப்பதால் 62 மட்டும் வைத்துக்கொண்டு, முதல் இலக்கத்தை அதாவது 1 ஐ, அடுத்த ஸ்டெப்பிற்கு Carry Forward செய்யவேண்டும்.)
படி 3:   வர்க்கம் காண வேண்டிய எண்ணின் முதல் இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (9)2=81. (படி2 ல் மீதமான 1 ஐ 81 உடன் கூட்ட 82 ஆகிறது.) பின்னர் படி1, படி2 மற்றும் படி3 விடைகளை ஒன்று சேர்க்க வேண்டும்.


உதாரணம் 3 : (102)2 = ?

(102)2 = (1)2 | (1x2)x2 | (2)2
= 01 | 04 | 04
= 1404

வழிமுறை :

படி 1:   முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (2)2=04. ( 4 ஆனது ஒற்றை இலக்கமாக இருப்பதால் 4 க்கு பதிலாக 04 என்று போட்டுக்கொள்ள வேண்டும்.)
படி 2:   பின்னர் எண்ணின் முதல் மற்றும் கடைசி இலக்கத்தின் பெருக்கல் பலனை இருமடங்காக்க வேண்டும்.(1x2)x2 = 04. ( 4 ஆனது ஒற்றை இலக்கமாக இருப்பதால் 4 க்கு பதிலாக 04 என்று போட்டுக்கொள்ள வேண்டும்.)
படி 3:   வர்க்கம் காண வேண்டிய எண்ணின் முதல் இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (1)2=01. ( 1 ஆனது ஒற்றை இலக்கமாக இருப்பதால் 1 க்கு பதிலாக 01 என்று போட்டுக்கொள்ள வேண்டும்.)


உதாரணம் 4 : (803)2 = ?

(803)2 = (8)2 | (8x3)x2 | (3)2
= 64 | 48 | 09
= 644809

வழிமுறை :

படி 1:   முதலில் வர்க்கம் காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (3)2=09. ( 9 ஆனது ஒற்றை இலக்கமாக இருப்பதால் 9 க்கு பதிலாக 09 என்று போட்டுக்கொள்ள வேண்டும்.)
படி 2:   பின்னர் எண்ணின் முதல் மற்றும் கடைசி இலக்கத்தின் பெருக்கல் பலனை இருமடங்காக்க வேண்டும்.(8x3)x2 = 48.
படி 3:   வர்க்கம் காண வேண்டிய எண்ணின் முதல் இலக்கத்தின் வர்க்கம் காண வேண்டும். எனவே, (8)2=64. பின்னர் படி1, படி2 மற்றும் படி3 விடைகளை ஒன்று சேர்க்க வேண்டும்.




 
Free Web Hosting