தமது தளத்தைப் பற்றி வாழ்த்துரைகள்

நினைவாற்றல் பயிற்சி, கீ.வ.குப்பம்.
  Jan 01 2016

நினைவாற்றல் பயிற்சி, குடியாத்தம்.
  Jan 01 2016


  Jan 25 2013

கணிதம்
வேத கணிதத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா தீர்த்த சுவாமியால்(Swami Bharati Krishna Tirthaji) 16 முதன்மை சூத்திரங்களும், 13 துணை சூத்திரங்களும் உருவாக்கப்பட்டது. இந்த சூத்திரங்கள் மூலமாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்கம், வர்கமூலம், கணம், கணமூலம், சிக்கலெண்கள், வகுபடுந்தன்மை, இயற்கணிதம், நுண்கணிதம், வகையீட்டு நுண்கணிதம், இருபடி சமன்பாடு, திரிகோணமிதி, பிதாகரஸ் தேற்றம், அப்போலோனியஸ் தேற்றம் போன்றவற்றை மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக விடை காண முடியும்.

  Dec 3 2012

வெளியிணைப்புகள்
www.vedic-maths.in தமிழில் வேத கணிதம் கற்றுத்தரும் தளம் (மொழிபெயர்ப்பிகளும் உள்ளன.)

http://www.mazhalaigal.com/
  Nov 2 2012

கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், வேத கணிதத்தை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் நிச்சயம் இத்தளம் பயனுடையதாக இருக்கும் எனும் நம்பிக்கையில் வாசகர்களுக்காக இத்தளம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளோம்.....

Yangchenphug HS School, Bhutan
  Nov 16 2012
It's Good site and very useful for many Mathematicians. Congrats.
Murugiah M
HOD of Mathematics
YHSS
Thimphu,BHUTAN

பண்கொம்.நெட் (சிரித்திரன்)
  Oct 29 2012

அருமையான ஒரு தளம் இது. இந்த அண்ட சராசரங்கள் இயங்குவது கணிதத்தின் அடிப்படையில் தான்.
ஒரு எண்ணை 12 ஆல் ஒரு வரியில் எப்படி பெருக்குவது என்பது எவ்வளவு இலகுவானதென்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது பெருக்குபடும் எண்ணுக்கு முன் ஒரு ௦(சைபர்) ஐ சேர்க்கவேண்டும். இந்த தளத்தில் உள்ள ஒரு உதாரணம் பார்ப்போம். 4131 என்பதை 12 ஆல் பெருக்க வேண்டும் என்றால் அதை 04131 என்று எழுதிவிட்டு வலது பக்கமாக தொடங்கி ஒவ்வொரு எண்ணையும் 2 ஆல் பெருக்கி அந்த எண்ணுக்கு வலது பக்கத்தில் உள்ள எண்ணை கூட்டி வலதிலிருந்து இடப்புறமாக எழுதிவந்தால் சரியான விடை கிடைக்கும்.....

www.4tamilmedia.com.
  Oct 26 2012


தமிழில் ஒரு முதன்மையான கணித வலைத்தளம் எனும் அடையாளத்துடன் வலம்வந்து கொண்டிருக்கிறது 'வேத கணிதம்' இணையத்தளம். இந்து சமயத்தின் நான்கு அடிப்படை வேதங்களுல் ஒன்றான அதர்வண வேதத்திலிருந்து உருவாக்கப்பட்ட வேத கணிதமானது, உலகின் வேகமான கணக்கீட்டு முறைகளில் ஒன்றாக விளங்குகிறது.

மிகப்பெரிய கணக்குகளை சுலபமாக தீர்ப்பதற்கும், துல்லியமாகவும்,வேகமாகவும் விடை காண்பதற்கும் பெரிதும் உதவுகிறது வேத கணிதம். பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள், எண்களை எழுதுவதில் இடமதிப்பு திட்டத்தை அறிமுகபடுத்தியவர்கள் என இந்தியர்களுக்கு எப்படி கணிதத்தில் தனிப்பெருமை உண்டோ, அதே பெருமை வேத கணிதத்தின் கண்டுபிடிப்பாளர்கள் என்பதிலும் கிடைக்கிறது. ஆனால் இன்றைய நவீன உலகில், வேத கணிதத்தின் அடிப்படை, முக்கியத்துவம், பயன்பாடு என்பவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் பெருமளவில் குறைந்துவிட்டது. இதனை கருத்திக் கொண்டு, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வேத கணிதத்தை கொண்டு சென்று சேர்க்கும் வகையில் இந்த இணையத்தளம் தொழிற்பட்டு வருகிறது.

மேலும் தமிழ் மொழி தெரியாத மற்ற மொழி ஆர்வலர்களுக்கும், வேத கணிதம் பயன்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மொழி பெயர்ப்பியும் கொடுக்கப்பட்டுள்ளது. முதுனிலை பட்டதாரியும், கணிப்பொறி வல்லுனருமான தே. அன்பழகன் இந்த இணையத்தளத்தை நிறுவியுள்ளார். கணிதத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும், வேத கணிதத்தை பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் நிச்சயம் இத்தளம் பயனுடையதாக இருக்கும் எனும் நம்பிக்கையில் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இத்தளம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளோம்.

www.velichaveedu.com
  Nov 2 2012

தற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். உண்மையில் வேதத்திற்கும் இந்த கணக்கு முறைக்கும் என்ற தொடர்பும் இல்லை. இந்த கணித முறையை வெளி உலகிற்கு கொண்டு வந்தது பாரதி கிருஷ்ணா என்ற ஆரிய பிராமணர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் இக்கணித முறை அதர்வண வேதத்தில் உள்ளதாக முதலில் கூறினார். பேராசிரியர் சுக்லா என்பவர் இக்கணிதம் வேதத்தில் இடம்பெற்றுள்ளது என்பதற்கான சான்றுகள் எங்கே என்று பாரதி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பாரதி கிருஷ்ணா, இந்த கணக்கு முறை தன்னுடைய சொந்த முயற்சியால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும், இதை வேறு எந்த நூலிலும் காணமுடியாது என்றும் கூறிவிட்டார். ஆகவே இந்த கணித முறையை பாரதி கிருஷ்ணா வேத கணிதம் என்ற பெயரில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெளிவாகிறது. அன்று முதல் இது வேத கணிதம் என்று வழங்கப்பட்டு வருகிறது.....

ப்ரஹ்மண்யன் பெங்களூரு.
. http://www.tamilbrahmins.com/member.php?u=632
  Aug 26 2012
அன்பர் திரு அன்பழகன் அவர்களுக்கு, தங்களது வேத கணிதம் என்ற இணைய தளம் (http://www.vedic-maths.in/) மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது, அற்புதமான முயற்சி. அதை தொடரவும் . இந்த "தமிழ் பிராமணர்" தளத்தில் அறிவு வளர்ச்சிக்கு உதவும் எல்லா முயற்சிகளும் வரவேற்கப்படுகின்றன. வேத கணித படைப்புகளை தங்கள் மேற்கொண்டும் பதிவிறக்க வேண்டுகிறேன்.

நல்லாசிகள்
ப்ரஹ்மண்யன்,
பெங்களூரு.


வரலாற்றுப் புதையல்
. https://www.facebook.com/VaralaatruPudhayal
  Aug 26 2012
தமிழில் ஒரு கணித வலைப்பூ ! என்பதைவிட தமிழில் முதல் கணித வலைப்பூ !! என அறிகையில் மனம் களிப்புறுகிறது. உங்கள் மேலான நோக்கதிற்கு எங்கள் வாழ்த்துக்கள். கணிதத்தில் நம் தமிழர் மிகப்பெரிய வல்லுனர்களாக திகழ்ந்துள்ளனர். அது நம் கட்டிடக் கலைகளிலிருந்தும், துல்லியிமான வேலைபாடுகளில் இருந்தும் வெளிப்படுகிறது.பழைய வேத கணித முறை தற்கால கணித முறையைவிட சுருக்கமும், வேகமும் கொண்டது என்பது தங்களுக்கு சொல்லி தெரியவேண்டியதில்லை. இதனை அகழ்ந்து ஆய்வு செய்து "தமிழில்" வெளியிட்டிருக்கும் உங்கள் முயற்சி போற்றப்படவேண்டியது. வரும் எதிர்கால தமிழ் பிள்ளைகள் தமிழின் வளமையையும், இனிமையையும் கற்று உணர இவ்வகையான இணையதளங்களின் எழுச்சி இன்றியமையாதது. உங்கள் இந்த முயற்சி சிறந்து, வளர்ந்திட வாழ்த்துகிறோம் !!


Tamil Historical Books
. https://www.facebook.com/historicalbooks
  Aug 19 2012
நண்பர்களே இந்த இணைப்பில், தமிழ் வழி கணிதம் கற்கும் வகையில் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. பார்த்து படித்து பயன் பெறவும்......இந்த இணையவலை தளத்தை வழி நடத்தும் நண்பருக்கு("அன்பழகன் தேவராஜுக்கு ") நன்றி.. ---நன்றி Tamil Historical Books

தமிழ்த்தொண்டு-Tamil Thondu
. https://www.facebook.com/tamilthondu
  Aug 18 2012
நண்பா.. உங்களின் எண்ணங்களை தமிழ்தொண்டு மிகவும் பாராட்டுகிறது.. தங்களின் நிறுவனத்தை பற்றி நம் தமிழ்தொண்டில் பகிர்ந்துள்ளேன்.. ---நன்றி தமிழ்தொண்டு

 
Free Web Hosting