கிழமையை கண்டுபிடித்தல் (Day of the week of any date)

10,000 வருடத்திற்கான அசத்தல் நாள்காட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய மனதாலேயே எந்தவொரு தேதியிக்கான கிழமையை கண்டுபிடிக்க ஒரு பொதுவான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிழமைக்கான சூத்திரம் = ( D + M + Y + [Y/4] ) mod 7.

இங்கு,

D=தேதி

M=மாதத்திற்கு உண்டான எண்

Y=வருடத்தின் கடைசி இரு இலக்கங்கள்

[Y/4] = வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பு

மாதத்திற்கான எண்கள்(அட்டவணை-1)

 

கிழமைகான எண்கள்(அட்டவணை-2)

மாதம்                  எண்  

Year <2000

Year>=2000

   

கிழமை

வகை-I வகை-II
ஜனவரி 1/0* சனி 0 1
பிப்ரவரி 4/3* ஞாயிறு 1 2
மார்ச் 4 திங்கள் 2 3
ஏப்ரல் 0 செவ்வாய் 3 4
மே 2 புதன் 4 5
ஜுன் 5 வியாழன் 5 6
ஜுலை 0 வெள்ளி 6 0
ஆகஸ்ட் 3      
செப்டம்பர் 6      
அக்டோபர் 1      
நவம்பர் 4      
டிசம்பர் 6      


* லீப் வருடமாக இருந்தால் ஜனவரி-0 என்றும், பிப்ரவரிக்கு-3 என்றும் கொள்க.

உதாரணம் 1

உங்கள் நன்பரின் பிறந்த நாள் 30-01-1985 என்று வைத்துக் கொள்வோம்.


கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (30 + 1 + 85 + 21) mod 7
= 137 mod 7      137 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 4.
எனவே, உங்கள் நன்பர் பிறந்த தினம் புதன் கிழமை ஆகும். (குறிப்பு : பிறந்த வருடமானது 2000 க்கு குறைவாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-I ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் பிறந்த தேதியை எடுத்துக்கொள்ள வேண்டும். (30)

படி 2 : ஜனவரி மாதத்திற்கு உண்டான எண்ணை அட்டவனை 1 ஐ பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். (1)

படி 3 : பிறந்த வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். (85)

படி 4 : பிறந்த வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி மதிப்பை விட்டுவிடவும். (85/4=21 ignore reminder)

படி 5 : மேற்படி கிடைக்கும் எண்களிண் கூடுதலை (30 + 1 + 85 + 21) 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியை அட்டவணை-2 ல் ஒப்பிட்டு பார்த்து கிழமையை கண்டுபிடிக்கவும்.


உதாரணம் 2

வரப்போகும் 01-01-2015 க்கான கிழமை என்ன என்பதைப் பார்ப்போம்.


கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (1 + 1 + 15 + 3) mod 7
= 20 mod 7     20 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 6.

எனவே, 01-01-2015 தேதிக்கான கிழமை வியாழன் ஆகும். (குறிப்பு : வருடமானது 2000 க்கு அதிகமாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-II ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் தேதியை எடுத்துக்கொள்ள வேண்டும். (1)

படி 2 : ஜனவரி மாதத்திற்கு உண்டான எண்ணை அட்டவனை-1 ஐ பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். (1)

படி 3 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். (15)

படி 4 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி மதிப்பை விட்டுவிடவும். (15/4=3 ignore reminder)

படி 5 : மேற்படி கிடைக்கும் எண்களிண் கூடுதலை (1 + 1 + 15 + 3) 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியை அட்டவணை-2 ல் ஒப்பிட்டு பார்த்து கிழமையை கண்டுபிடிக்கவும்.


உதாரணம் 3

இந்தியா சுதந்திர தினம் : 15-08-1947


கிழமை = (D+M+Y+(Y/4)) mod 7
= (15 + 3 + 47 + 11) mod 7
= 76 mod 7     76 ஐ 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி மதிப்பு
= மீதி 6.

எனவே, இந்தியா சுதந்திரம் அடைந்தது வெள்ளி கிழமை ஆகும். (குறிப்பு : வருடமானது 2000 க்கு குறைவாக உள்ளது. எனவே அட்டவணை-2 ல் வகை-I ல் பார்க்கவும்)

விளக்கம் :

படி 1 : முதலில் தேதியை எடுத்துக்கொள்ள வேண்டும். (15)

படி 2 : ஆகஸ்டு மாதத்திற்கு உண்டான எண்ணை அட்டவனை-1 ஐ பார்த்து எடுத்துகொள்ள வேண்டும். (3)

படி 3 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். (47)

படி 4 : வருடத்தின் கடைசி இரு இலக்கத்தை 4 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு மதிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி மதிப்பை விட்டுவிடவும். (47/4=11 ignore reminder)

படி 5 : மேற்படி கிடைக்கும் எண்களிண் கூடுதலை (15 + 3 + 47 + 11) 7 ஆல் வகுக்க கிடைக்கும் மீதியை அட்டவணை-2 ல் ஒப்பிட்டு பார்த்து கிழமையை கண்டுபிடிக்கவும். 
Free Web Hosting