பெருக்கல் (Multiplication using Base Method)

"எல்லாம் 9 லிருந்து கடைசி மட்டும் 10 லிருந்து" மற்றும் "நெடுக்காக மற்றும் குறுக்காக" சூத்திரங்கள் மூலமாக அடிப்படை எண்களுக்கு அருகாமையிலுள்ள இரு எண்களுக்கான பெருக்கல்களை மிக எளிதாக காண முடியும்.

வழிமுறை:

படி 1 : கொடுக்கப்பட்ட எண்களுக்கான அடிப்படை எண்ணை கண்டுபிடித்து அந்த எண்ணிற்கும் பெருக்கவேண்டிய எண்ணிற்கும் உள்ள வித்தியாசத்தை எழுதவும். வித்தியாசமானது குறை எண்ணாகவோ அல்லது மிகை எண்ணாகவோ வரலாம்

படி 2 :இரண்டு எண்ணிற்கான வித்தியாசத்தைக் பெருக்கவும் கிடைப்பது இரண்டாவது பாதி விடை.

படி 3 :குறுக்கு வாட்டு கழித்தல் (கூட்டல்) விடையை எழுதவும் கிடைப்பது முதல் பாதி விடை.

உதாரணம் 1: 92 x 94 = ?


92,94 க்கான அடிப்படை எண் :100

92 -08 (92-100 = -08)
x94 -06 (94-100 = -06)
________________________
92-06 / 48 (-08 x -06)
(அ)
94-08

=86/48
=8648

வழிமுறை :

படி 1 : கொடுக்கப்பட்ட எண்களுக்கான அடிப்படை எண்ணை கண்டுபிடித்து அந்த எண்ணிற்கும் பெருக்கவேண்டிய எண்ணிற்கும் உள்ள வித்தியாசத்தை எழுதவும்.

92 ,94 எண்களுக்கான அடிப்படை எண் : 100. எனவே, 92-100 =-08 மற்றும் 94-100 = -06

படி 2 : இரண்டு எண்ணிற்கான வித்தியாசத்தைக் பெருக்கவும் கிடைப்பது இரண்டாவது பாதி விடை.

=-08 x -06 =48

படி 3 : குறுக்கு வாட்டு கழித்தல் விடையை எழுதவும்.

(92-06) அல்லது (94-08) =86


உதாரணம் 2: 978 x 996


978,996 க்கான அடிப்படை எண் :1000

978 -022 (978-1000 = -022)
x996 -004 (994-1000 = -004)
________________________
978-004 / 088 (-022 x -004)
(அ)
994-022

=974/088
=974088

வழிமுறை :

படி 1 : கொடுக்கப்பட்ட எண்களுக்கான அடிப்படை எண்ணை கண்டுபிடித்து அந்த எண்ணிற்கும் பெருக்கவேண்டிய எண்ணிற்கும் உள்ள வித்தியாசத்தை எழுதவும்.

978 ,996எண்களுக்கான அடிப்படை எண் : 1000

எனவே, 978-1000 = -022 மற்றும் 994-1000 = -004

படி 2 : இரண்டு எண்ணிற்கான வித்தியாசத்தைக் பெருக்கவும் கிடைப்பது இரண்டாவது பாதி விடை.
=-022 x -004 =088.

படி 3 : குறுக்கு வாட்டு கழித்தல் விடையை எழுதவும்.
(978-004) அல்லது (994-022) =974. 
Free Web Hosting