என்னைப் பற்றி

வணக்கம் நன்பர்களே!

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன். வேலூர் மாவட்டம் மேல்காவனூர் எனது பூர்வீகமாகும். அப்பா ஆ.தேவராஜ் சுய தொழில் செய்பவர். அம்மா அஞ்சலி, புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர். தம்பி கார்த்திகேயன், அடுத்து தங்கை சங்கீதா, மனைவி லலிதா. எனது ஆரம்ப கல்வியை மேல்காவனூரிலுள்ள தொடக்க பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தேன், அங்கு திரு.ரகுபதி (ஒன்றாம் வகுப்பு), திரு.திருநாவுக்கரசு (ஆறாம் வகுப்பு) போன்ற நல்ல ஆசிரியர்களின் ஊக்கத்தால் நன்றாக பயின்றேன் , பின்னர் கீ.வ.குப்பம் அ.மே.நி.பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரையும் எனது பள்ளிக் கல்வி முடிவுற்றது. எனது தாய் தந்தையரின் ஊக்கத்தால் பத்து வயதிலிருந்தே ஓவியம், அறிவியல், கணிதம், புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் படிப்பதற்கான ஆர்வம் மேலோங்கியது. மேலும் என்னுடைய சிறு வயதிலிருந்தே அம்புலிமாமா, பூந்தளிர் மற்றும் கோகுலம் போன்ற சிறுவர் சம்பந்தமான புத்தகங்களை தவறாமல் படிப்பேன்.


பள்ளிக் கல்வி முடிந்ததும் ஆம்பூரிலுள்ள Mazharul Uloom கல்லூரியில் கணிப்பொறித்துறையில் 2000 ஆம் ஆண்டு பட்டயமும், 2003 ஆண்டு முதுனிலை பட்டயமும் பெற்றேன். கல்லூரிப்படிப்பு முடிந்தவுடன் பில்லாந்திப்பட்டு எனும் சிற்றூரில் 12 ஆம் வகுப்பு கணிணி ஆசிரியராக 5 வருடம் பணியாற்றினேன், பின்னர் சென்னையில் ePagemaker Pvt Ltd என்னும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் கணிப்பொறி வல்லுனராக பணிபுரிந்தேன். தற்சமயம் ஆஸ்திரேலியாவிலுள்ள உள்ள ஒரு நிறுவனத்தில் கணிப்பொறி வல்லுனராக பணிபுரிந்து வருகின்றேன்.

எனது பிற ஆர்வங்கள்

எனது கணிணி/கணிதம் தொடர்பான கட்டூரைகள்:

  • 01. விக்கிப்பீடியா: வேத கணிதம்
  • 02. http://www.c-sharpcorner.com: Windows Service - Quick Catch Up
  • 03. http://www.c-sharpcorner.com: Oracle MERGE Statement - Quick Catch Up
  • 04. Computer Ulagam : Java - RMI  1 | 2
  • 05. Computer Ulagam : C# - COM Component  1
  • 06. Computer Ulagam : ASP - Connect DB with out using DSN  1 | 2
  • 07. Computer Ulagam : C# - Networking  1
  • 08. Computer Ulagam : Java - Servlets  1 | 2
  • 09. Computer Ulagam : Swap two numbers - With out temp variables  1
  • 10. Computer Ulagam : DHTML - Filters  1 | 2
  • 11. Computer Ulagam : Javascript - Programs  1 | 2

ஓவியங்கள்:

பெரிய படத்தினைப் பார்க்க, அதன் மீது கிளிக் செய்யவும்

புத்தகம்:

 
Free Web Hosting