பண்டைத் தமிழர்களின் கால அளவு முறைகள்

பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள். பண்டைய தமிழர்களின் கால அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாகவும், துல்லியமாகவும் இருந்துள்ளது.

"நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும உயிரென்றார் - அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம்"

விளக்கம் :

2 கண்ணிமை=1 கைந்நொடி (0.125 செகன்ட்)
2 கைந்நொடி=1 மாத்திரை (0.25 செகன்ட்)
2 மாத்திரை=1 குரு (0.5 செகன்ட்)
2 குரு=1 உயிர் (1 செகன்ட்)
6 உயிர்=1 கஷணிகம்
12 கஷணிகம்=1 விநாடி
60 விநாடி=1 நாழிகை.

இத்தோடு இல்லாமல், பொழுது, நாள், வாரம், மாதம் என நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.

"நாழிகை ஏழரை நற்சாமந் தானாலாம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் - தோழி
தினமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே"

விளக்கம் :

60 விநாடி=1 நாழிகை
2½ நாழிகை=1 ஓரை
3¾ நாழிகை=1 முகூர்த்தம்
7½ நாழிகை=1 சாமம்
4 சாமம்=1 பொழுது
2 பொழுது=1 நாள்
7 நாள்=1 கிழமை
15 நாள்=1 பக்கம்
30 நாள்=1 திங்கள்
6 திங்கள்=1 அயனம்
2 அயனம்=1 ஆண்டு 
Free Web Hosting