எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க (Any number divided by 5)

எந்த ஒர் எண்ணையும் 5 ஆல் வகுக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி ஒரே வரியில் விடை காண முடியும்.

வழிமுறை :

எண்ணை 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக அதை இருமடங்காக்கி அதாவது 2 ஆல் பெருக்கி கிடைக்கும் விடையின் கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும்.

உதாரணம் 1 : 75 / 5 = ?

வழிமுறை :

படி 1 :இங்கு 75 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 75 X 2 = 150, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 15.0 என்பது விடையாகிறது.


உதாரணம் 2 : 500 / 5 = ?

வழிமுறை :

படி 1 : இங்கு 500 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 500 X 2 = 1000, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 100.0 என்பது விடையாகிறது.


உதாரணம் 3 : 123 / 5 = ?

வழிமுறை :

படி 1 : இங்கு 123 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 123 X 2 = 246, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 24.6 என்பது விடையாகிறது.


உதாரணம் 4 : 123456789 / 5 = ?

வழிமுறை :

படி 1 :இங்கு 123456789 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 123456789 X 2 = 246913578, பிறகு கடைசி இலக்கத்திற்கு முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 24691357.8 என்பது விடையாகிறது.


உதாரணம் 5 : 3212341.0433 / 5 = ?

வழிமுறை :

படி 1 :இங்கு 3212341.0433 ஐ 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக 2 ஆல் பெருக்க வேண்டும், அதாவது எண்ணை இருமடங்காக்க வேண்டும். எனவே 3212341.0433 X 2 = 6424682.0866, பிறகு கடைசி இலக்கத்திற்கு (இங்கு கடைசி இலக்கம் என்பது 2 ஆகும்.) முன்பாக ஒரு தசம புள்ளியை சேர்க்கவும், அதாவது 642468.20866 என்பது விடையாகிறது.


விளக்கம் :

நாம் இங்கு ஓர் எண்ணை 5 ஆல் வகுப்பதற்கு பதிலாக அதை இருமடங்காக்கி (2 ஆல் பெருக்கி) 10 ஆல் வகுக்கிறோம். அதாவது,
X / 5 = (X * 2) / 10

  
Free Web Hosting