பைந்தமிழ் கணிதம்

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. அக்கால தமிழ் பாடல்கள் நம்முடைய புலவர்களின் கணித அறிவினை பரைசாற்றுகிறது.

உருளையின் விட்டம் காண:

ஒரு உருளையின்/ கல்த்தூணின்/மரத்தின் குறுக்கு விட்டத்தினைக் காண்பதற்கான
எளியமுறை : (%99.9 சரியாக இருக்கும் )

"வளையதைக் கிளையதாகி,
கிளையதை எட்டதாக்கி,
எட்டில் மூன்றைத் தள்ளி
நின்றது நெற்றிக்கனம்"

உருளையின் சுற்றளவை நூலில் எடுத்து , முனைகளை சேர்த்து 4 முறை தொடர்ந்து மடித்தால் கிடைக்கும் 16 இழைகளில் 5 இழைகளின் நீளமானது உருளையின் விட்டமாகும்.

விளக்கம் :

வளையதை : முதலில் ஒரு நூல் அல்லது கயிற்றின் உதவியினால் உருளைத் தூணின் சுற்றளவினை சரியாக எடுத்துக் கொள்ளவும்.
வளையதைக் கிளையதாக்கி : அந்த சுற்றளவினை இரு சம பாகங்களாக மடித்துக் கொள்ளவும்.
கிளையதை எட்டதாக்கி : அதனை எட்டு சம பாகமாகப் பிரித்துக் கொள்ளவேண்டும்.
எட்டில் மூன்றைத் தள்ளி : அந்த எட்டு சமபாக அளவின் மூன்று பாகத்தை நீக்கிவிடவேண்டும்.
நின்றது நெற்றிக் கனம் : 8- 3 = 5 , மீதம் நிற்கின்ற ஐந்து சமபாகத்தின் அளவு அந்த விட்டம், நெற்றிக் கனம்.

(நெற்றிக்கனம் என்பது ’விட்டம்’ அதாவது உருளையின் குறுக்கு வெட்டுத் தோற்றமான வட்டத்தில், இரண்டு ஆரங்கள் சேர்ந்தது, விட்டம்)



 
Free Web Hosting