ஏழால் வகுபடும் தன்மை

வகுபடுந்தன்மை காண வேண்டிய எண்ணின் கடைசி இலக்கத்தை இருமடங்காக்கி கடைசியிலக்கத்தை தவிர்த்த எண்ணால் கழிக்க வேண்டும். இதையே சிறிய எண் வரும் வரை, திரும்ப திரும்ப செய்ய வேண்டும். விடையானது 7 இன் மடங்காகவோ (குறையெண் அல்லது மிகை எண்) அல்லது பூஜ்யமாகவோ இருந்தால் அவ்வெண்ணாது 7 ஆல் வகுப்படும்.

உதாரணம் 1: எண் 2345, எழால் வகுபடுமா?

விளக்கம் :

படி 1 :எண் 2345 இல் கடைசி இலக்கம் 5 ஆகும், அதை இருமடங்காக்கினால் 5x2=10 வருகிறது, இந்த 10 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 234 லிருந்து கழிக்க 224 வருகிறது.

படி 2 :பின்னர் 224 இல் கடைசி இலக்கம் 4 ஆகும், அதை இருமடங்காக்கினால் 4x2=8 வருகிறது, இந்த 8 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 22 லிருந்து கழிக்க 14 வருகிறது.

படி 3 :பின்னர் 14 இல் கடைசி இலக்கம் 4 ஆகும், அதை இருமடங்காக்கினால் 4x2=8 வருகிறது, இந்த 8 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 1 லிருந்து கழிக்க -7 வருகிறது. எனவே எண் 2345 ஆனது 7 ஆல் வகுபடும்.உதாரணம் 1: எண் 4021, எழால் வகுபடுமா?

விளக்கம் :

படி 1 :எண் 4021 இல் கடைசி இலக்கம் 1 ஆகும், அதை இருமடங்காக்கினால் 1x2=2 வருகிறது, இந்த 2 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 402 லிருந்து கழிக்க 400 வருகிறது.

படி 2 :பின்னர் 400 இல் கடைசி இலக்கம் 0 ஆகும், அதை இருமடங்காக்கினால் 0x2=0 வருகிறது, இந்த 0 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 40 லிருந்து கழிக்க அதே 40 வருகிறது.

படி 3 :பின்னர் 40 இல் கடைசி இலக்கம் 0 ஆகும், அதை இருமடங்காக்கினால் 0x2=0 வருகிறது, இந்த 0 ஐ, கடைசி இலக்கம் தவிர்த்த எண்ணான 4 லிருந்து கழிக்க 4 வருகிறது. எனவே எண் 4021 ஆனது 7 ஆல் வகுபடாது. 
Free Web Hosting