எந்த ஒர் எண்ணையும் 16 ஆல் பெருக்க

எந்த ஒர் எண்ணையும் 16 ஆல் பெருக்க கீழ்கண்ட முறையை பின்பற்றி சுலபமாக விடை காண முடியும்.

வழிமுறை :

முதலில் 16 ஆல் பெருக்க வேண்டிய எண்ணை 10 ஆல் பெருக்கவும், பிறகு பெருக்கி வந்த விடையின் பாதியை கண்டு பிடிக்கவும். பின்னர் இவ்விரு விடையுடன் பெருக்க வேண்டிய எண்ணையும் கூட்டினால் கிடைப்பது விடையாகும். இந்த முறையை திரும்ப திரும்ப செய்வதன் மூலம், பேப்பர், எழுதுகோல் இல்லாமால் மனதாலேயே சொல்லமுடியும்.

உதாரணம் 1: 16 X 24 = ?

4 X 10 = 240 ..... [1]
240/2 = 120 ..... [2]
[1] + [2] + பெருக்க வேண்டிய எண் = 240 + 120 + 24 = 384

வழிமுறை :

படி 1 :24 ஐ 10 ஆல் பெருக்க, 24 X 10 = 240.

படி 2 : பின்னர் படி [1] விடை - 240 இன் பாதி, 120.

படி 3 : படி 1 ன் விடை, படி 2 ன் விடை, பெருக்க வேண்டிய எண், இம்மூன்றையும் கூட்ட, 240 + 120 + 24 = 384 ஆனது விடையாகும்.


உதாரணம் 2: 16 X 45 = ?

45 X 10 = 450 ..... [1]
450/2 = 225 ..... [2]
[1] + [2] + பெருக்க வேண்டிய எண் = 450 + 225 + 45 = 720

வழிமுறை :

படி 1 :45 ஐ 10 ஆல் பெருக்க, 45 X 10 = 450.

படி 2 : பின்னர் படி [1] விடை - 450 இன் பாதி, 225.

படி 3 : படி 1 ன் விடை, படி 2 ன் விடை, பெருக்க வேண்டிய எண், இம்மூன்றையும் கூட்ட, 450 + 225 + 45 = 720 ஆனது விடையாகும்.


உதாரணம் 3: 16 X 180 = ?

முதலில் 180 ஐ 18 X 10 என கொள்வோம். 18 X 10 = 180 ..... [1]
180/2 = 90 ..... [2]
[1] + [2] + பெருக்க வேண்டிய எண் = 180 + 90 + 18 = 288, கிடைத்த விடையை 10 ஆல் பெருக்கவும், ஆக 2880

வழிமுறை :

படி 1 :18 ஐ 10 ஆல் பெருக்க, 18 X 10 = 180.

படி 2 : பின்னர் படி [1] விடை - 180 இன் பாதி, 90.

படி 3 : படி 1 ன் விடை, படி 2 ன் விடை, பெருக்க வேண்டிய எண், இம்மூன்றையும் கூட்ட, 180 + 90 + 18 = 288, கிடைத்த விடையை 10 ஆல் பெருக்கவும், ஆக 2880 ஆனது விடையாகும். 
Free Web Hosting